பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்போம்: சித்தராமையா
120 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்போம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.


மைசூரு: கர்நாடகத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 120 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்போம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கர்நாடகத்துக்கு வந்து தேர்தல் பிரசாரங்கள் செய்ததன் மூலம் மக்களின் மனநிலையை மாற்றமுடியவில்லை என்றும் சித்தராமையா சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் மே 10ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 118 இடங்களிலும், பாஜக 76 இடங்களிலும், மஜத 25 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
காங்கிரஸ் வெற்றி முகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பிரசாரம் செய்தும், கர்நாடக வாக்காளர்களிடம் எதுவும் எடுபடவில்லை என்று கூறினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும். தற்போதுதான் சில தொகுதிகளில் வெற்றிநிலவரங்கள் தெரிய வந்துள்ளன. இன்னமும் பல சுற்று முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. எனவே, காங்கிரஸ் 120 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...