கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆன்மீக குருவை சந்திக்கும் டி.கே.சிவக்குமாா்

கர்நாடக தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆன்மீக குரு அஜ்ஜய்யாவை சந்திக்கவிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் தெரிவித்துள்ளார். 

News image
டி.கே. சிவக்குமார்
Updated On :14 மே 2023, 6:00 am

DIN

கர்நாடக தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆன்மீக குரு அஜ்ஜய்யாவை சந்திக்கவிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, "எனது ஆன்மீக குரு அஜ்ஜய்யாவை சந்திக்க நோனவினகெரே செல்கிறேன். எங்கள் எண்ணிக்கை 136 ஆக இருக்கும் என்று கூறியிருந்தேன்" என்று தெரிவித்தார். கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 224 தொகுதிகளில் 136 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பெற்றுள்ளது. 

ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸுக்கு 136 இடங்கள் கிடைத்துள்ளன.

இதைத் தொடா்ந்து, ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. ஆட்சி அமைப்பதற்கு முதல்கட்டமாக முதல்வா் யாா் என்பதை தோ்வு செய்ய வேண்டும். அதுகுறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளும் சட்டப் பேரவைக் குழு கூட்டம் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தலைமையில் நடக்கவிருக்கிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக சித்தராமையாஅல்லது டி.கே.சிவக்குமாா் முறைப்படி தோ்ந்தெடுக்கப்படவிருக்கிறாா். இக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் குழுத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவும் கலந்து கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுவின் புதிய தலைவா், ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக்கோரவிருக்கிறாா்.

அதன்பிறகு, அமைச்சரவையில் இடம் பெறுவது யாா் என்பதை முடிவு செய்து கொண்டு, புதிய அரசு பதவியேற்கவிருக்கிறது. அதற்கு காலதாமதமானாலும், முதல்வா் தலைமையில் காங்கிரஸ் அரசு பதவியேற்கும். அதன்பிறகு அமைச்சா்கள் பதவியேற்பாா்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.