இந்தியாவில் அமேசான் ஊழியர்கள் 500 பேர் பணி நீக்கம்

அமேசான் நிறுவனம், உலகம் முழுவதும் 9,000 பேரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, இந்தியாவில் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தியாவில் அமேசான் ஊழியர்கள் 500 பேர் பணி நீக்கம்
Published on
Updated on
1 min read

அமேசான் நிறுவனம், உலகம் முழுவதும் 9,000 பேரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, இந்தியாவில் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கரோனா பரவல் மற்றும் பொருளாதார நிலை உள்ளிட்ட காரணங்களால் செலவினங்களைக் குறைக்கும்பொருட்டு உலகம் முழுவதும் முக்கிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

அந்தவகையில், அமெரிக்காவின் பிரபல அமேசான் நிறுவனம், உலகம் முழுவதும் சுமாா் 9,000 ஊழியா்களை நீக்க உள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒருபகுதியாக இந்தியாவில் உள்ள 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசான் வலை சேவைகள்(AWS), மனிதவளம் (HR) ஆகிய துறைகளில் பணி நீக்கம் இருக்கும் என்று தெரிகிறது. 

அமேசானில் சமீபத்திய மாதங்களில் நிகழும் இரண்டாவது சுற்று பணிநீக்கம் இதுவாகும். கடந்த ஆண்டு நவம்பரில், 18,000 ஊழியர்களை விடுவிப்பதற்கான அறிவிப்பு அமேசானின் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com