கண் பார்வை: சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?
By DIN | Published On : 15th May 2023 04:31 PM | Last Updated : 15th May 2023 04:31 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
உடலில் உணர்திறன் வாய்ந்த உறுப்புகளில் மிக முக்கியமானது கண்கள். உலகின் அழகைக் காண உதவும் கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் இன்று பலருக்கும் கண் ரீதியான பிரச்னைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை/தூரப்பார்வை ஏற்பட்டு கண்ணாடி அணியும் சூழல் ஏற்படுகிறது.
கண் பிரச்னைகள் வராமல் தடுக்க சில குறிப்பிட்ட உணவுகளை கண்டிப்பாக உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் ஏ: கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியம். கேரட், கீரைகள், மாம்பழம், பப்பாளி போன்ற பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் க்ரீம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
ரிபோபிளேவின்: சோயாபீன்ஸ், பன்னீர், புரோக்கோலி ஆகியவற்றில் வைட்டமின் பி2 அல்லது ரிபோபிளேவின் நிறைந்து காணப்படுகின்றன.
கால்சியம்: பாதாம், வால்நட், ராஜ்மா, ஓட்ஸ் ஆகிய கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
வைட்டமின் இ: இலை காய்கறிகள், முழு கோதுமை, முந்திரி பருப்பு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒமேகா 3 : டூனா, கானாங்கெளுத்தி மீன், ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட் ஆகிய ஒமேகா 3 உள்ள உணவுப் பொருள்களும் கண் பார்வையை மேம்படுத்தும்.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைக்க எளிய வழி இதுதான்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...