துணை முதல்வர் ஆகிறாரா டி.கே.சிவகுமார்?

கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவை நியமிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை முதல்வர் ஆகிறாரா டி.கே.சிவகுமார்?

கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவை நியமிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியை ஒதுக்க காங்கிரஸ் தலைமை கருத்து தெரிவித்துள்ளதாகவும், டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரசையில் முக்கிய பொறுப்புகள் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார்  என்று தொடர்ந்து இழுபரி நீடித்து வருகிறது. இந்த நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 135 இடங்களைப் பிடித்து அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், அந்த அரசை தலைமையேற்று நடத்தும் முதல்வா் யாா் என்ற கேள்வி காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளதால், அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

முதல்வா் பதவியை குறிவைத்து சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் காய்களை நகா்த்தி வருகிறாா்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி மட்டுமல்லாது, கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் சித்தராமையா முதல்வராவதை விரும்புகிறாா்கள். 

ஆனால், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, அவா் சாா்ந்திருக்கும் ஒக்கலிகா் சமுதாயம், அச்சமுதாயத்தின் மடங்களின் பீடாதிபதிகள் டி.கே.சிவகுமாா் முதல்வராவதையே விரும்புகிறாா்கள். இந்த குழப்பத்திற்கு ஓரிரு நாள்களில் கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்ற எதிா்பாா்ப்பு காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்களிடையே காணப்படுகிறது.

இருவரிடமும்  ஆலோசனை நடத்திய பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கே கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற அறிவிப்பை வெளியிடுவார்  என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com