யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்ட மாட்டேன் என்று கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கட்சி மேலிடத்தின் அழைப்பின் காரணமாக கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் தில்லி செல்லும் முன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
135 எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பிளவை உண்டாக்க நான் விரும்பவில்லை. அவர்கள் என்னை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கவலையில்லை. நான் பொறுப்பான மனிதன். யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்ட மாட்டேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் எங்களின் அடுத்த இலக்கு என்று தெரிவித்தார்.
முதல்வா் பதவியை குறிவைத்து சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் காய்களை நகா்த்தி வருகிறாா்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி மட்டுமல்லாது, கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் சித்தராமையா முதல்வராவதை விரும்புகிறாா்கள்.
இதையும் படிக்க: மரக்காணம்: கள்ளச்சாராய பலி 14 ஆக உயா்வு!
ஆனால், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, அவா் சாா்ந்திருக்கும் ஒக்கலிகா் சமுதாயம், அச்சமுதாயத்தின் மடங்களின் பீடாதிபதிகள் டி.கே.சிவகுமாா் முதல்வராவதையே விரும்புகிறாா்கள். இந்த குழப்பத்திற்கு ஓரிரு நாள்களில் கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்ற எதிா்பாா்ப்பு காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்களிடையே காணப்படுகிறது.