ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொத்து மதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து மதிப்புகள் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகியுள்ளது.
இப்பட்டியலில், முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொத்து மதிப்பு 2020 - 2021 நிதியாண்டின் படி ரூ.65.40 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவரின் அசையும் சொத்துகளின்(நகை, வங்கிக்கணக்கு, கார்) மதிப்பு ரூ.12.52 கோடி என்றும் அசையா சொத்துகளின்(நிலம், வீடு) மதிப்பு ரூ.52.88 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம்!
ஒடிசாவில் 5 முறை முதல்வராக பொறுப்பேற்ற நவீன் பட்நாயக்கின் அசையா சொத்துக்கள் அனைத்தும் அவரின் பெற்றோர் வழி வந்தவை.
மேலும், மாநில அமைச்சர்களான அசோக் சந்திர பாண்டா, ரானேந்திர பிரதாப் ஸ்வைன், பிரமிளா மாலிக், பிரித்தி ரஞ்சன் கடாய் உள்ளிட்ட 14 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர்.
ரூ.44 லட்சம் சொத்து மதிப்புகொண்ட சுரங்கத்துறை அமைச்சர் பிரபுல்லா மாலிக்தான் இந்தப்பட்டியலில் வசதி குறைந்தவர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்!

கச்சத்தீவு தேவாலயத் திருவிழா இன்று தொடங்கியது!

பெரியகுளம் டூ அறிவாலயம்! ஓபிஎஸ் கடந்துவந்த பாதை..

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள்?
வீடியோக்கள்

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26
தினமணி வீடியோ செய்தி...

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

