ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை!

ரூ.2000 நோட்டுகளை வங்கியில் மாற்ற எந்த அடையாள ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டியதில்லை என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரூ.2000 நோட்டுகளை வங்கியில் மாற்ற எந்த அடையாள ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டியதில்லை என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

ஒரே சமயத்தில் ரூ.20,000 மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் எந்த வித படிவத்தையோ, அடையாள ஆவணமோ தர வேண்டியதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

மேலும், மக்களுக்கு எந்தவித இடையூரும் இன்றி ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பானப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தலாம் அல்லது சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்தது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாகக் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

அதன்பிறகு புதிய ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை ஆர்பிஐ வெளியிட்டது. நாட்டில் கருப்புப் பணப் பதுக்கலைக் குறைக்கும் நோக்கில் ரூ.1,000 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்துவிட்டு, ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்த மத்திய அரசின் நடவடிக்கையைப் பொருளாதார நிபுணர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். 

ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறவில்லை. அந்நோட்டுக்கு சில்லறை மாற்றுவது கடினமாக இருப்பதாகப் பலரும் தெரிவித்தனர். அதையடுத்து, ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து படிப்படியாகக் குறைக்கப்பட்டன. 2018-19-ஆம் நிதியாண்டுக்குப் பிறகு புதிய ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை.  

ஏடிஎம் இயந்திரங்கள் வாயிலாக ரூ.2,000 நோட்டைப் புழக்கத்தில் விடுவதை ஆர்பிஐ முற்றிலுமாக நிறுத்தியது. தற்போது ரூ.2,000 நோட்டுகளின் பயன்பாடு மக்களிடையே பெருமளவில் குறைந்துவிட்டது. 

கடந்த 2018, மார்ச் மாதத்தில் ரூ.6.73 லட்சம் கோடி (மொத்த நோட்டுகளில் 37.3 சதவீதம்) மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.3.62 லட்சம் கோடி (10.8 சதவீதம்) மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. 

இந்த நிலையில், ரூ.2000 நோட்டுகளை வங்கியில் மாற்ற எந்த அடையாள ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டியதில்லை என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com