அவைத்தலைவர் தேர்வு: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது!

புதிய அவைத் தலைவரை தேர்வு செய்யும்பொருட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  கூட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெற்று வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதிய அவைத் தலைவரை தேர்வு செய்யும்பொருட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  கூட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெற்று வருகிறது. 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் கடந்த 20 ஆம் தேதி பொறுப்பேற்ற நிலையில் தொடர்ந்து எம்எல்ஏக்கள் அனைவரும் பொறுப்பேற்றனர். 

தற்போது தற்காலிக அவைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே உள்ளார்.

இந்நிலையில் நிரந்தரமாக புதிய அவைத் தலைவரை தேர்வுசெய்யும் பொருட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  கூட்டம் இன்று(புதன்கிழமை) தொடங்கியது.

கர்நாடக சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு  முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான யு.டி. காதர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு செய்யாததால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

அவ்வாறு காதர் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு வரும் முதல் முஸ்லிம் தலைவர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com