புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: கார்கே இன்று ஆலோசனை

கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

News image

கோப்புப்படம்

Updated On :25 மே 2023, 5:14 am

DIN

கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து பெங்களூரு​வில் கண்டீரவா மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

இதில் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் அதைத் தொடர்ந்து 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

இந்நிலையில், தில்லி இன்று மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தகுதியான எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை சித்தராமையாவும், சிவகுமாரும் காங்கிரஸ் மேலிடத்துக்கு அளிக்கவுள்ளனர்.

ஏற்கெனவே, முதல்வர் தேர்வில் இழுப்பறி ஏற்பட்ட நிலையில், அமைச்சர்கள் தேர்விலும் இலாகா ஒதுக்கீட்டிலும் மீண்டும் பிரச்னை ஏற்படாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.