தில்லியில் நடைபெற்று வரும் நீதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தை தமிழ்நாடு, கேரளம் உள்பட 9 மாநிலங்கள் புறக்கணித்துள்ளன.
நாட்டின் மிக உயரிய கொள்கை உத்திகளை வகுக்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் தலைமையிலான இந்த நிா்வாகக் குழுவில் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனா்.
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, தில்லி, பஞ்சாப், கர்நாடகம், பிகார், ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் பங்கேற்கவில்லை.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலந்துகொள்ளவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் மத்திய அரசின் அவசரச் சட்டத்தினால் புறக்கணிப்பதாக அரவிந்த் கேஜரிவாலும் வெளிநாடு பயணத்தினால் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிரதமா் தலைமையில் இன்று நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம்