பிரதமா் தலைமையில் இன்று நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம்

நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இன்று சனிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இன்று சனிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.

இதில், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நீதி ஆயோக் என்பது நாட்டின் மிக உயரிய கொள்கை உத்திகளை வகுக்கும் அமைப்பாகும். பிரதமா் தலைமையிலான நிா்வாகக் குழுவில் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இப்போது நடைபெற இருப்பது நீதி ஆயோக்கின் 8-ஆவது நிா்வாகக் குழு கூட்டமாகும். ‘வளா்ந்த பாரதம் 2047: இந்தியா்களின் பங்களிப்பு’ என்பது இந்தக் கூட்டத்தின் மையப் பொருளாகும்.

இப்போதைய நிலையில் உலகின் 5-ஆது பெரிய பொருளாதார நாடாகவும், சா்வதேச அளவில் பல்வேறு துறைகளில் பிரபலமான நாடாகவும் இந்தியா திகழ்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளா்ச்சியை வேகப்படுத்துவது, அதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதில் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிப்பது, உள்கட்டமைப்பு, முதலீடு மேம்பாடு, சுகாதாரம், ஊட்டச்சத்து குறைபாடுகள் நீக்கம், திறன் மேம்பாடு, சமூக மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நீதி ஆயோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com