தில்லியில் கடந்த ஆண்டு 5,652 சாலை விபத்துகள்!

2022ஆம் ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தில்லியில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்கள் பதிவாகி உள்ளது.
தில்லியில் கடந்த ஆண்டு 5,652 சாலை விபத்துகள்!

புதுதில்லி: 2022ஆம் ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தில்லியில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்கள் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து இந்தூர் மற்றும் ஜபல்பூர் உள்ளது என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் 5,652, இந்தூரில் 4,680, ஜபல்பூரில் 4,046, பெங்களூருவில் 3,822, சென்னையில் 3,452, போபாலில் 3,313, மல்லாபுரத்தில் 2,991, ஜெய்ப்பூரில் 2,687, ஹைதராபாத்தில் 2,516, கொச்சியில் 2,432 விபத்துகள் நடந்துள்ளன.

10 லட்சம் மக்கள் தொகை கொண்ட 50 நகரங்களில் நடந்த மொத்த சாலை விபத்துகளில் 46.37 சதவிகிதமும் இந்த 10 நகரங்களில் நடந்துள்ளன. இந்த 50 நகரங்களில் 2022ஆம் ஆண்டில் மொத்தம் 76,752 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 17,089 பேர் உயிரிழந்துள்ளனர் 69,052 பேர் காயமடைந்துள்ளனர்.

சென்னை, தன்பாத், லூதியானா, மும்பை, பாட்னா மற்றும் விசாகப்பட்டினம் தவிர அனைத்து நகரங்களில் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை 2021 உடன் ஒப்பிடும்போது 2022ல் அதிகரித்துள்ளது. அதே வேளையில் 2022ல் நடைபெற்ற சாலை விபத்தில் இறப்புகளில் சுமார் 68 சதவிகிதம் கிராமப்புறங்களில் நிகழ்ந்தன. அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் 32 சதவிகிதம் இறப்புகள் பதிவாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com