900 வாக்குறுதிகளில் 9 கூட நிறைவேற்றவில்லை: பாஜக பொதுச் செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் மக்களுக்கு அளித்த 900 வாக்குறுதிகளில் ஒன்பது கூட நிறைவேற்றவில்லை என பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியுள்ளார். 
900 வாக்குறுதிகளில் 9 கூட நிறைவேற்றவில்லை: பாஜக பொதுச் செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் மக்களுக்கு அளித்த 900 வாக்குறுதிகளில் ஒன்பது கூட நிறைவேற்றவில்லை என பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

கமல்நாத் 17 மாதங்கள் முதல்வராக இருந்தபோது மாநில மக்களுக்கு அளித்த 900 வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவர் அந்த வாக்குறுதிகளில் ஒன்பது கூட நிறைவேற்றவில்லை.

விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கமல்நாத் கூறியது நிறைவேற்றப்பட்டதா? வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.4000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.. சுயஉதவிக்குழு பெண்களின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வது பற்றி அவர் பேசவில்லை என கேள்வி எழுப்பினார்.

மத்தியப் பிரதேச மக்கள் அவரை சோதித்துப் பார்த்தே அவரை நிராகரித்துள்ளனர்.

இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்று. மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது, டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்காளர்கள் 230 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com