ஊடகங்கள் மக்களுக்கு பயனுள்ள விவாதங்களை நடத்த வேண்டும்: கர்நாடக முதல்வர் பேச்சு!

ஊடகங்கள் மூடநம்பிக்கைகள் குறித்து விவாதிக்காமல், மக்களுக்கு பயனுள்ள விவாதங்களை நடத்த வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசினார்.
ஊடகங்கள் மக்களுக்கு பயனுள்ள விவாதங்களை நடத்த வேண்டும்: கர்நாடக முதல்வர் பேச்சு!

ஊடகங்கள் மக்களுக்கு பயனுள்ள விவாதங்களை நடத்த வேண்டும். மக்களுக்கு பயனளிக்காத, பொய்யான ஜோதிடம் குறித்த விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசினார். 

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் மாநாட்டை நேற்று (அக்டோபர் 31) துவக்கி வைத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியதாவது: “நான் சாம்ராஜ்நகருக்கு சென்றால் ஆட்சியை இழப்பேன் என்று ஜோதிடர்கள் கூறினர். ஆனால் நான் எனது முதல் பதவிக்காலத்தை நிறைவுசெய்துவிட்டு, தற்போது இரண்டாம் முறையாக ஆட்சி செய்துவருகிறேன்.

சில ஊடகங்கள் ஜோதிடர்களை அழைத்துவந்து மூடநம்பிக்கையான நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அதனால் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை.

எனது ஆட்சியின் தவறுகளை தயக்கமின்றி சுட்டிக்காட்டுங்கள். நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோமா, எங்களது ஆட்சி மக்களுக்காக உழைக்கிறதா இல்லையா என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்” என்று முதல்வர் சித்தராமையா பேசினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com