அக்டோபரில் கியா இந்தியா விற்பனை 4.4 சதவீதம் அதிகரிப்பு!
கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை அக்டோபரில் 4.4 சதவீதம் அதிகரித்து 24 ஆயிரத்து 351ஆக உள்ளது.


புதுதில்லி: கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை அக்டோபரில் 4.4 சதவீதம் அதிகரித்து 24 ஆயிரத்து 351ஆக உள்ளது.
கடந்த 2022 அக்டோபரில் கியா இந்தியா 23,323 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த மாதம், செல்டோஸ் 12,362 யூனிட்டுகளுடனும், சோனெட் விற்பனை 6,493 யூனிட்டுகளுடனும், கேரன்ஸ் 5,355 யூனிட்டுகளுடனும், ஈவி 6,141 யூனிட்டுகளுடனும் உள்நாட்டு சந்தையில் விற்பனையாகி முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களின் கண்ணோட்டமே, எங்கள் இலக்கை அடைய பெரிதும் உதவியது. செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய தயாரிப்புகள் இருந்தபோதிலும் அந்தந்த பிரிவுகளில் தொடர்ந்து நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று கியா இந்தியா தேசிய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் ஹர்தீப் சிங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், வரும் மாதங்களிலும் இதே வேகத்தைத் தக்கவைத்துக் கொள்ள நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...