டாக்டர் பனிகாந்தா ககாதி விருது திட்டத்தின் கீழ் அஸ்ஸாமிய அரசு அந்த மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கவுள்ளது.
அதன்படி, 35,775 மாணவ மாணவியருக்கு நவம்பர் 30 அன்று ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது.
75 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 5,566 மாணவர்களுக்கும் 60 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 30,209 மாணவியருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
அஸ்ஸாமிய சுற்றுலா துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா பேசும் போது, “மாநில அரசு 35,775 அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கவுள்ளது. இந்த விழா நவ. 30-ல் நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | அமலாக்கத்துறை விசாரணைக்கு கேஜரிவால் ஆஜராகவில்லை!
மேலும், உயர் கல்வியில் (10-ம் வகுப்பு) 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற 27,183 மாணவர்களுக்கு ரூபாய்.15,000 நவம்பர் 29-ம் தேதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் பூடான் அரசுக்கு மேலும் மூன்று எம்.பி.பி.எஸ் இடங்கள் அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

