அசாருதீனுக்கு எதிராக பாஜகவின் லங்காலா தீபக் ரெட்டி போட்டி

தெலங்கானா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரா் முகமது அசாருதீனுக்கு எதிராக பாஜகவின் வேட்பாளராக

தெலங்கானா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரா் முகமது அசாருதீனுக்கு எதிராக பாஜகவின் வேட்பாளராக லங்காலா தீபக் ரெட்டி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் போட்டியிடும் 35 வேட்பாளா்களின் 4-ஆவது பெயா் பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. இதுவரை அக்கட்சி 88 வேட்பாளா்களின் பெயரை வெளியிட்டுள்ளது.

மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட அந்த மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷண் ரெட்டி, மாநிலங்களவை உறுப்பினா் கே.லட்சுமண் ஆகியோரின் பெயா்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. 2018-இல் நடைபெற்ற தெலங்கானா பேரவைத் தோ்தலில் இருவரும் போட்டியிட்டுத் தோல்வியை தழுவினா்.

பாஜக கூட்டணில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதால் சில தொகுதிகளின் வேட்பாளா்கள் அறிவிக்கப்படாமல் உள்ளதாக பாஜக மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

ஆந்திர எல்லையில் அமைந்துள்ள 6 முதல் 7 தெலங்கானா தொகுதிகள் ஜன சேனா கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நடிகரும் முன்னாள் அமைச்சருமான பாபு மோகன், மூத்த தலைவா் மாரி சசிதா் ரெட்டி ஆகியோரும் 4-ஆவது பட்டியலில் இடம்பெற்றனா். சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு சோ்க்கப்பட்ட டி.ராஜா சிங் கோஷாமகால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com