2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? - ஒவைசி கேள்வி

கடந்த 2008 -இல் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி

புது தில்லி: பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அசாதுதீன் ஒவைசி, கடந்த 2008 -இல் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அமேதி லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்ததைக் கண்டு ஏளனமாகப் பேசிய ஒவைசி, "நீங்கள் அமேதி தேர்தலில் தானாக தோற்றீர்களா? அல்லது பணம் பெற்றுக்கொண்டு தோற்றீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளதாவது:  

"அன்புள்ள ராகுல் காந்திக்கு யாராவது சொல்லுங்கள், கடந்த 2008-இல் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? ஆந்திராவில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கிரண்குமார் ரெட்டி அரசுக்கு ஆதரவாக எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது? குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க ஜெகன் மோகன் ரெட்டியை சமாதானப்படுத்த எனக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? 

2014 -இல் இருந்து இப்போது வரை நீங்கள் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறீர்கள், இதற்கு நான் பொறுப்பல்ல என அவர் மேலும் கூறியுள்ளார்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவ. 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் நான்கு மாநில தேர்தல்களுடன் சேர்த்து டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, அந்த மாநிலத்தில் உள்ள கல்வகுா்தி பகுதியில் புதன்கிழமை  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், பாஜகவுக்கும், தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள பாரத ராஷ்டிர சமிதிக்கும் இடையே மறைமுக புரிதல் உள்ளது.

எங்கெல்லாம் பாஜகவை எதிா்த்து காங்கிரஸ் தோ்தலில் போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது என்று குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com