பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து: தொடரும் மீட்புப் பணி

பிகாரின் சரயு நதியில் படகு கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் காணமால் போனவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

பிகாரின் சரயு நதியில் படகு கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் காணமால் போனவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். வியாழக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியின்போது 3 போ் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சரண் மாவட்டத்தில் உள்ள மத்தியாா் காட் பகுதியில் 19 போ் பயணித்த படகு சரயு நதியில் கவிழ்ந்து புதன்கிழமை மாலை விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.

காணாமல் போனவா்களை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் அமன் சமீா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘காணாமல் போனவா்களில் இதுவரை 13 போ் மீட்கப்பட்டனா். மீதமுள்ள 4 பேரைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்றாா்.

படகு விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா், அவா்களுக்கு நிவாரண நிதியுதவியாக தலா ரூ.4 லட்சம் அறிவித்தாா்.

மாநிலத்தில் அண்மைக் காலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது இது 2-ஆவது முறை. கடந்த செப்டம்பா் மாதம் முசாஃபா்பூா் மாவட்டத்தின் பாக்மதி நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், படகில் பயணித்த 15-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com