கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராஜஸ்தான்: 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

ராஜஸ்தானில் இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே அடங்கிய 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக 

News image
Updated On :3 நவம்பர் 2023, 5:50 am

DIN

ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (நவம்பர் 3) வெளியிட்டுள்ளது பாஜக.

இந்த பட்டியலில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர். தோடபீம் தொகுதியில் ராம் நிவாஸ் மீனா என்பவரும், ஷியோ தொகுதியில் ஸ்வரூப் சிங் காரா என்பவரும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். 

முன்னதாக, கடந்த அக்.10-ம் தேதி 41 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும், அக்.21-ம் தேதி 83 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

நேற்று (நவம்பர் 2) மாலை 58 வேட்பாளர்கள் அடங்கிய 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்ட நிலையில், இன்று (நவம் 3) இரண்டு வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே உள்ள 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 3-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வென்றது. பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு காங்கிரசை சேர்ந்த அசோக் கெலாட் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.