வழக்குகள் ஒத்திவைப்பு.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

தேவையில்லாமல், வழக்குகளை ஒத்திவைக்குமாறு வழக்குரைஞர்கள் கோர வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார்.
வழக்குகள் ஒத்திவைப்பு.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை


புது தில்லி: தேவையில்லாமல், வழக்குகளை ஒத்திவைக்குமாறு வழக்குரைஞர்கள் கோர வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார்.

தேதிக்கு மேல் தேதி கொடுக்கும் நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் மாறுவது வேண்டாம் என்றும் சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் ஒத்திவைப்பது தொடர்பான புள்ளிவிவரத்தைப் பார்த்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இவ்வாறு கூறினார்.

இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தொடங்கியதும், சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன என்ற புள்ளிவிவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதனைப் பார்த்த தலைமை நீதிபதி சந்திரசூட், தேதிக்கு மேல் தேதி கொடுக்கும் நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் மாறுவதை விரும்பவில்லை. வழக்குரைஞர்கள் மிகவும் அவசியமெனில் மட்டுமே வழக்கை ஒத்திவைக்கக் கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்களின் நம்பிக்கையை இழக்கும் வகையில் செயல்படுவது நமது நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்கு நல்லதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் 3,688 ஒத்திவைப்பு ரசீதுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இன்று ஒரே நாளில் 175 ஒத்திவைப்பு ரசீதுகள் அளிக்கப்பட்டுள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

அனைத்து பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கும் நான் வேண்டி கேட்டுக்கொள்வது, அவசியமின்றி வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்குமாறு கோர வேண்டாம் என்பதே என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com