கொசு மாதிரியில் ஜிகா வைரஸ்: அண்டை மாநிலத்தில் அலர்ட்

கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கொசு மாதிரியில் ஜிகா வைரஸ்: அண்டை மாநிலத்தில் அலர்ட்
Published on
Updated on
1 min read


பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

சித்லகட்டா தாலுகா, தலகயலபேட்டா கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாள்தோறும் சிக்கபள்ளபூர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகிறார்கள். இந்த நிலையில், ஜிகா வைரஸ் தடுப்பு எச்சரிக்கைகள் மாநிலம் முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 68 இடங்களில், பல்வேறு வகைகளிலும் கொசுக்களின் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் ஜிகா வைரஸ் கடந்த ஒரு சில மாதங்களாகவே பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சலோடு வந்த மூன்று பேரை பரிசோதித்ததில் அவர்களுக்கும் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாக ஜிகா வைரஸ் பரவுகிறது.  தோலில் தடிப்புகள், காய்ச்சல், வயிற்று உபாதை, தசை, மூட்டுகளில் வலி,  தலைவலி போன்றவை ஜிகா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். 

தற்போதுவரை இதனைத் தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறப்பு சிகிச்சைகளும் இதுவரை எதுவும் இல்லை.

ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் வந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, ஒட்டுமொத்த கிராமமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com