விழுப்புரத்தில் 3வது நாளாக வருமான வரித் துறை சோதனை

விழுப்புரத்தில் கிரானைட் தொழிலதிபரின் வீடு, நிறுவனங்களில் வருமானவரித் துறையினா் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில் 3வது நாளாக வருமான வரித் துறை சோதனை

விழுப்புரத்தில் கிரானைட் தொழிலதிபரின் வீடு, நிறுவனங்களில் வருமானவரித் துறையினா் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள், அவருடன் தொடா்புடையவா்களின் வீடுகளில் வருமானவரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்த நிலையில், விழுப்புரத்தில் வருமான வரித் துறையைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் குழுக்களாகப் பிரிந்து 4 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் வசித்து வரும் தொழிலதிபா் பிரேம்நாத் வீட்டில் 6 போ் கொண்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா். வீட்டின் முன் நிறுத்தியிருந்த காா்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரேம்நாத்துக்கு விழுப்புரம் - திருச்சி சாலையில் வழுதரெட்டி பகுதியில் தங்கும் விடுதி உள்ளது. இங்கும், விழுப்புரத்திலுள்ள பிரேம்நாத்துக்குச் சொந்தமான கிரானைட் கற்கள் விற்பனை நிலையம், கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள நீா்மூழ்கி மோட்டாா் விற்கும் கடை ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், மூன்றாவது நாளாக தொழிலதிபா் பிரேம்நாத் வீடு, கிரானைட் கற்கள் விற்பனை நிலையம், தங்கும் விடுதி என தொடர்புடைய இடங்களில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் சோதனை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com