அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: கேஜரிவால்!

அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: கேஜரிவால்!

தீபாவளியை முன்னிட்டு தில்லி அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
Published on

தீபாவளியை முன்னிட்டு தில்லி அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், புத்தாடை, பட்டாசு, சொந்த ஊருக்கு பயணம் என தீபாவளிக்கான ஏற்பாடுகள் மக்களிடையே விருவிருப்பை கூட்டியுள்ளது. 

இந்த நிலையில், தீபாவளி என்றாலே அரசு நிறுவன ஊழியர்கள் முதல் தனியார்  நிறுவன ஊழியர்கள் வரை போனஸ் எதிர்ப்பார்ப்பது வழக்கம்.

அதன்படி, தில்லியில் அரசிதழ் பதிவுபெறாத சுமார் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க கேஜரிவால் அரசு முடிவு செய்துள்ளது. 

குரூப் பி மற்றும் குரூப் சி போன்ற அரசிதழ் பதிவு பெறாத 80 ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தில்லி அரசு சுமார் ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது எனச் செய்தியாளர்கள் கூட்டத்தில் முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

ஊழியர்களின் வாழ்க்கையைச் சிறப்பாக்க தில்லி அரசு எப்போதும் முயற்சி செய்து வருவதாகவும், இதுபோன்ற முயற்சிகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் முதல்வர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com