தொழில்நுட்பக் கோளாறு சரியானது! மிஸோரம் முதல்வர் வாக்களித்தார்

வாக்கு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து அய்ஸ்வால் தொகுதியில் மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா வாக்களித்தார்.
அய்ஸ்வால் தொகுதியில் வாக்களித்த மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா. 
அய்ஸ்வால் தொகுதியில் வாக்களித்த மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா. 

வாக்கு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து அய்ஸ்வால் தொகுதியில் மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா வாக்களித்தார். 

மிஸோரமின் 40 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 

கிறிஸ்தவா்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த மாநிலத்தில் ஆளும் மிஸோ தேசிய முன்னணி, எதிா்க்கட்சிகளான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக என பலமுனைப் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா இன்று காலையே அய்ஸ்வால் வடக்கு - II தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்கச் சென்றார். ஆனால், அங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் வாக்களிக்க முடியாமல் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினார். 

இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டதையடுத்து முதல்வர் ஜோரம்தங்கா வாக்களித்தார். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மிஸோரத்தில் மீண்டும் எங்கள் ஆட்சி அமையும். மேலும் என்னுடைய தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளுடன் நான் வெற்றி பெறுவேன்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com