நரேந்திர மோடியின் கைப்பாவைகளா கேசிஆர் - ஓவைசி?

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அரசியல் கட்சியினர் பிரசாரங்களில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.  
ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சி வைத்துள்ள பதாகை
ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சி வைத்துள்ள பதாகை


தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவைகளாக இருப்பதைப்போன்ற பதாகையை காங்கிரஸ் கட்சி வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானாவில் இம்மாத இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அரசியல் கட்சியினர் பிரசாரங்களில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.  

இதில், தெலங்கானாவின் பாரத ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ்வையும், மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியையும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சிக்கும் வகையில் ஓவியங்களையும் பதாகைகளையும் வைத்துள்ளது.

மக்கள் அதிகம் கூடும் ஹைதராபாத்தில், சந்திரசேகர ராவ்வும், ஓவைசியும் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக செயல்படும் விதமாக பதாகைகளை வைத்துள்ளது. 

இரு கட்சிகளும் பாஜகவின் இரண்டாவது அணியைப் போன்று செயல்படுகிறது என்பதை உருவகப்படுத்துவதற்காக இத்தகைய பதாகையை காங்கிரஸ் கட்சி சித்தரித்துள்ளது. 

மக்கள் அதிகமாகக் கூடும் ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் மூன்று கட்சிகளையும் விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி பதாகைகளை வைத்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com