கேரளா : கொச்சி விமான நிலையத்தில் 36 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

கொச்சி விமான நிலையத்தில் 36 லட்சம் மதிப்பிலான தங்க வளையல்களை மறைத்துவைத்துக் கொண்டு வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 
கேரளா : கொச்சி விமான நிலையத்தில் 36 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

கொச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் 36 லட்சம் மதிப்பிலான தங்க வளையல்களை வைத்திருந்த பெண் ஒருவரைக் கைது செய்தனர்.

 640.39 கிராம் எடை கொண்ட வளையல்கள் கைபற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த வளையல்கள் நிவியா கிரீம் டப்பாவிற்குள் மறைத்துக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

மேலும் கைது செய்யப்பட்ட பெண் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜோசி என்பதும் அவர் இத்தாலியிலிருந்து கொச்சினுக்கு விமானத்தில் வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது பையை சோதனையிடும்போது அதில் 640.39 கிராம் எடைகொண்ட 4 தங்க வளையல்கள் புத்திசாலித்தனமாக மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வளையல் சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

ஒரு வாரத்திற்கு முன்பாக் சௌதி அரேபியாவின் ஜெடாநகரிலிருந்து கொச்சி வந்த விமானப் பயணிகளிடம் நடத்திய சோதனையில் 52 லட்சம் மதிப்பிலான தங்கம் கொச்சி சுங்கத் துறையால் கைப்பற்றதுகுறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com