சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் தேர்தல் இரண்டு நாட்களில் தொடங்கவிருக்கும் நிலையில், பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 15-வது தவணையை இன்று (நவ.15) விடுவிப்பது உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவ. 17 வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சட்டீஸ்கரில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவின் முதல் கட்டம் நவ. 17-ல் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ‘பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்’ 15-வது தவணை இன்று விடுவிக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் பொறுப்பு பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“பிரதமரின் விவசாயி நிதியுதவி திட்டத்தின் 15-வது தவணை இன்று வெளியிடப்படவுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் இரண்டு நாள்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. ராஜஸ்தானில் 10 நாள்களிலும் தெலுங்கானாவில் 15 நாள்களிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது”
மேலும், 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஆகஸ்ட்டில் விடுவிக்கப்பட்ட தவணை, 2022-ல் அக்டோபரில் விடுவிக்கப்பட்ட தவணை, இந்த ஆண்டு தாமதமாக நவம்பரில் விடுவிக்கப்படுவது, “உள்நோக்கம் கொண்ட தாமதம் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தானில் நவ.25-யிலும் தெலுங்கானாவில் நவ.30-யிலும் தேர்தல் நடைபெறுகிறது. டிச.3 அன்று மிசோரம் உள்பட ஐந்து மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.