ஒரே ஆண்டில் 41 ஆயிரம் காப்புரிமைகள்: இந்தியா சாதனை!

இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பிக்கும் விகிதமும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் 2023-2024 நிதியாண்டில் இதுவரை 41,010 காப்புரிமைகள் வழங்கியுள்ளது.

இது குறித்து மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தாவது:

”இதுவொரு சாதனை. இதுவரையிலான ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த எக்ஸ் பதிவைப் பகிர்ந்த இந்திய பிரதமர் மோடி, “அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய நமது பயணத்தில் ஒரு மைல்கல். இந்திய இளைஞர்கள் இந்த முன்னேற்றத்தால் நிச்சயம் பயன்பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, உலக அறிவுசாா் சொத்துரிமை அமைப்பின் ஆண்டறிக்கையில்,  “கடந்த 11 ஆண்டுகளாக அதிகளவிலான காப்புரிமை விண்ணப்பங்களை இந்தியா பதிவு செய்து வருகிறது. காப்புரிமை பதிவில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளின் வளா்ச்சி விகிதத்தைவிட இந்தியாவின் வளா்ச்சி விகிதம் அதிகமானது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

2013-14 நிதியாண்டில் காப்புரிமை எண்ணிக்கை 4,227 ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com