தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மருத்துவர், காவலர் உள்பட 4 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத் தொடர்புகள் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர், காவலர் உள்பட 4 அரசு ஊழியர்களை புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மருத்துவர், காவலர் உள்பட 4 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் 


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத் தொடர்புகள் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர், காவலர் உள்பட 4 அரசு ஊழியர்களை புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீநகர் எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் நிசார்-உல்-ஹாசன், காவலர் அப்துல் மஜீத் பட், உயர்கல்வித் துறை ஆய்வக பணியாளர் அப்துல் சலாம் ராதர், ஆசிரியர் ஃபரூக் அகமது மிர் ஆகிய 4 பேரும் பாகிஸ்தானைச் சோ்ந்த ஐ.எஸ். மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு தளவாட உதவிகளை வழங்கியது, இந்தியாவில் அந்த அமைப்புகளின் கொள்கைகளைப் பரப்பியது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி சேகரித்தது உள்ளிட்ட தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 11வது பிரிவின்படி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்தியா என்றார்கள்.

எனவே, குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நால்வரின் செயல்பாடுகள் அவா்களை அரசுப் பணியில் இருந்து நீக்குவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இருப்பதால் நால்வரையையும் புதன்கிழமை பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் 11-வது பிரிவின்கீழ் நால்வரையும் அரசுப் பணியிலிருந்து விடுவித்து பொது நிா்வாகத் துறை செயலா் உத்தரவைப் பிறப்பித்தாா்.

கடந்த மூன்று ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசமைப்புச் சட்டத்தின் 311(2)(சி) பிரிவின்கீழ் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com