உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் இன்றைக்குள் மீட்க மீட்புக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
உத்தரகண்ட் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் இன்று 11வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நுண் சுரங்கப்பாதைக்கு கிடைமட்ட துளையிடல், செங்குத்து மீட்பு சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் போன்ற பணிகளை மேற்கொண்டு, தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிடைமட்ட துளையிடம் மூலமாக 39 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது 45-50 மீட்டர் செலுத்தும் வரை தொழிலாளர்களை மீட்கும் நேரத்தை சரியாக கணிக்க முடியாது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். இன்று அல்லது நாளைக்குள் 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கான பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதையில் தொழிலாளா்கள் சிக்கிக் கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதியில், மின்சாரம், நீா் ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. மேலும், உணவு, மருந்துகள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமையும் பிரத்யேக, 4-இன்ச் கம்ப்ரசா் பைப்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. தொழிலாளா்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு அரசு நிறுவனங்கள் அணி திரட்டப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து: குழந்தை பலி, 8 பேர் மாயம்!
சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளா்கள் 41 பேரில் 15 போ் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள். மேலும், உத்தர பிரதேசம் (8), பிகாா் (5), ஒடிஸா (5), மேற்கு வங்கம் (3), உத்தரகண்ட் (2), அஸ்ஸாம் (2), ஹிமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: ஜோலாா்பேட்டை, நாட்றம்பள்ளி, பச்சூா்

வனம் காக்கும் முன்களப் பணியாளர்கள்!

ஜூன் 21இல் நீட் மறுதோ்வு மாணவா்களுக்கு டிடிசி, கிளஸ்டா் பேருந்துகளில் இலவச பயணம்

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



