பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப் போவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்பட 6 பேர் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷணை தில்லி நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
இந்த நிலையில், வினேஷ் போகத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”ஆளும் கட்சியின் சக்திவாய்ந்த தலைவர் ஒருவருக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதற்கே நாங்கள் மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. அரசாங்கத்தின் செல்வாக்கையும் தனது சொந்த அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி, பிரிஜ் பூஷண் பல பெண்களை மிரட்டி வழக்கைத் திரும்பப் பெறச் செய்தார்.
இருப்பினும், பல பெண் மல்யுத்த வீரர்கள் உறுதியாக நின்று, நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷணுக்கு எதிராகத் தொடர்ந்து போராடினர். ஆனால், அவர் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது எங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
தொடக்கத்திலிருந்தே, ஒட்டுமொத்த அரசு இயந்திரம், அரசாங்கம் மற்றும் நிர்வாக அமைப்பு ஆகியவை பிரிஜ் பூஷனைப் பாதுகாக்கும் வகையிலேயே செயல்பட்டு வந்துள்ளன.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து விரைவில் மேல்முறையீடு செய்வோம். நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 3, 2026
Summary
Government machinery protecting Brij Bhushan - Appeal soon - Vinesh Phogat
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடவுள் ராமர் விதித்தபடியே நடக்கும்! விடுதலை குறித்து பிரிஜ் பூஷண் கருத்து!
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!

எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அயோத்திக்குச் செல்வதில் சிக்கலா? பிரிஜ் பூஷண் சொல்வதென்ன?
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



