தேர்தல் பிரசார இறுதி நாள்: ராஜஸ்தானில் குவிந்துள்ள கட்சித் தலைவர்கள்!

ராஜஸ்தானில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
ராஜஸ்தானில் பிரதமர் மோடி..
ராஜஸ்தானில் பிரதமர் மோடி..
Published on
Updated on
2 min read

ராஜஸ்தானில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் (நவ. 25) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவி வருகின்றது. 

தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு கட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் ராஜஸ்தானில் இன்று(வியாழக்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. 

இதையொட்டி கடைசி நாளான இன்று இரு கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானின் தியோகர்க் பகுதியில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுள்ளதுடன் அங்கு செய்தியாளர்களையும் சந்திக்கிறார். சித்தோர்கர் மற்றும் நத்த்வாரா பகுதியில் பேரணியிலும் ஈடுபடுகிறார். 

மேலும் பாஜக தரப்பில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் கௌகான், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காங்கிரஸ் தரப்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com