ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது!

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது!

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் முடங்கியுள்ளது. 
Published on

பராமரிப்பு காரணமாக, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியுள்ளது. 

ரயில்களில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி (https://www.irctc.co.in/) இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் முடங்கியுள்ளது. 

ரயில்வேயின் மொபைல் செயலியான 'ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்' செயலியும் முடங்கியுள்ளது. 

இதனால் இன்று காலை, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இணையதளம் முடங்கியுள்ளதாகவும் டிக்கெட் முன்பதிவு செய்ய பின்னர் முயற்சிக்கவும் என்றும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஐஆர்சிடிசி தனது எக்ஸ் வலைத்தளத்தில், 'தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர், விரைவில் முன்பதிவு தொடங்கும்' என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com