மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

‘கிழக்கிந்தியாவின் தொழில் மண்டலமாக ஒடிசா திகழும்’ : அமைச்சர்

848 தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது ஒடிசா அரசு.

News image

பிரதாப் கேசரி தேப்

Updated On :24 நவம்பர் 2023, 10:23 am

24.73 லட்சம் மதிப்புள்ள 848 தொழில் திட்டங்களுக்கு ஒடிசா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில அமைச்சர் பிரதாப் கேசரி தேப் தெரிவித்துள்ளார்.

சட்ட பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், மாநில அரசு வெவ்வேறு துறையைச் சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் கிழக்கிந்தியாவில் ஒடிசாவை முக்கிய தொழில் மண்டலமாக மாற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றை சாளர முறையில் இந்த தொழில் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவுள்ளதாகவும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயம் மற்றும் உணவு பொருள்கள் உற்பத்தி, உலோகங்கள், மென்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், வேதிபொருள்கள் மற்றும் ஆடை சார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவிருப்பதாகவும் மற்ற அரசு துறைகளுடன் நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள செய்ய ஒடிசா தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகம் முகமையாக செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.