சந்திரசேகர ராவுக்கு சிறையில் இரு படுக்கையறை வசதி அளிக்கப்படும்: ரேவந்த் ரெட்டி பேச்சு

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு சந்திரசேகர ராவுக்கு சிறையில் இரு படுக்கையறை வசதி வழங்கப்படும் என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர ராவுக்கு சிறையில் இரு படுக்கையறை வசதி அளிக்கப்படும்: ரேவந்த் ரெட்டி பேச்சு
Published on
Updated on
1 min read

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு சந்திரசேகர ராவுக்கு சிறையில் இரு படுக்கையறை வசதி வழங்கப்படும் என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான மும்முனைப் போட்டி இருந்து வருகிறது. 

தேர்தல் பிரசாரம் நிறைவடைவதற்கு ஒரு வார காலமே இருப்பதால் இந்த கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தெலங்கானாவின் ஹுசுராபாத்தில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்ட தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: “இரு படுக்கையறை கொண்ட வீட்டுவசதி திட்டம் சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் அரசால் மிக மோசமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் பல ஏழைகளுக்கு வீடு கிடைக்கவில்லை. 

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சந்திரசேகர ராவ் சிறைக்கு அனுப்பப்பட்டு, அவருக்கு சிறையில் இரு படுக்கையறை வசதி வழங்கப்படும். ஏனென்றால் அவர் 10,000 ஏக்கர் நிலங்கள் மற்றும் லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்து வைத்துள்ளார்.

இந்த ஊழல் திமிங்கலமான கே.சந்திரசேகர ராவை சிறைக்கு அனுப்பினால், அவரைத் தொடர்ந்து அவரது மகன், மருமகள், மகள், மருமகன் என அனைவரும் சிறைக்கு செல்வார்கள். அதனால் அவருக்கு இரு படுக்கையறை வசதி செய்து தரப்படும்.” என்று பேசினார்.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி 47.4 சதவீத வாக்குகளுடன், 88 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com