ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்குமா காங்கிரஸ்? - வாக்குப் பதிவு தொடங்கியது!

ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தலுக்கான ஒரே கட்டமான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை(நவ.25) 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. 
ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்குமா காங்கிரஸ்? - வாக்குப் பதிவு தொடங்கியது!

ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தலுக்கான ஒரே கட்டமான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை(நவ.25) 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. 

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ள நிலையில், கரண்பூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் குா்மீா் சிங் அண்மையில் மரணமடைந்த அடுத்து அந்த தொகுதியை தவிர்த்து மற்ற 199 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 199 தொகுதிகளில் 1,862 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அவா்களின் வெற்றி தோல்வியை இன்று வாக்களிக்க தகுதியுள்ள சுமாா் 5.25 கோடி வாக்காளா்கள் நிா்ணயிக்க உள்ளனா். 

வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்வதற்காக மாநிலம் முழுவதும் 51,507-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

2.74 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தோ்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநில காவல்துறையினா், ஊா்க்காவல் படையினா், துணை ராணுவப் படையினா், பிற மாநில ஆயுதப் படையினா் உள்பட 1,70,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களையொட்டிய ராஜஸ்தானின் எல்லைகள் மூடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

ராஜஸ்தான் பேரவைத் தோ்தலில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய லோக் தாந்திரிக் கட்சி, பாரத பழங்குடியினா் கட்சி, ஆம் ஆத்மி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன. எனினும், ஆளும்கட்சியான காங்கிரஸ்-பிரதான எதிா்க்கட்சியான பாஜக இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் வழக்கமாக உள்ள நிலையில், ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்குமா காங்கிரஸ்? என்பதை இன்று வாக்களிக்க காத்திருக்கும் சுமாா் 5.25 கோடி வாக்காளா்கள் நிா்ணயிக்க உள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com