அடுத்த இரண்டு நாட்களில் காற்றின் தரம் மேம்படும்: தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நம்பிக்கை

தில்லியில் அடுத்த இரண்டு நாட்களில் காற்றின் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களில் காற்றின் தரம் மேம்படும்: தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நம்பிக்கை

தில்லியில் அடுத்த இரண்டு நாட்களில் காற்றின் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கோபால் ராய், “கடந்த இரண்டு, மூன்று நாட்களாக காற்று மாசு அதிகரித்து வந்தது. ஆனால் இன்று மாசுபாடு குறைந்து ‘தீவிரம்’ பிரிவிலிருந்து வெளிவந்துள்ளோம். 

இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களில் காற்றின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது.

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. அதன்படி தில்லி அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது. தற்போதைய நிலவரப்படி, வட இந்தியாவில் பயிர்க் கழிவுகள் எரிப்பு சம்பவம் மிகவும் குறைந்துள்ளது என்பதை தில்லி மக்களுக்கு கூற விரும்புகிறேன். 

இப்போதைய காற்று மாசுபாடு பெரும்பாலும் உள்ளூர் மக்களின் செயல்பாடுகளால் ஏற்படுகிறது. எனவே காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் நாம் அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.” என்று தெரிவித்தார்.

தற்போது தேசியத் தலைநகர் பகுதியானது காற்று தரக் குறியீடு 393 ஆகப் பதிவாகி, ‘தீவிரம்’ என்ற பிரிவிலிருந்து ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவிற்கு வந்துள்ளது.

காற்றின் தரக் குறியீடானது 0 முதல் 100 புள்ளிகள் வரை இருந்தால் ‘நன்று’,  100 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ‘மிதமானது’, 200 முதல் 300 புள்ளிகள் வரை இருந்தால் ‘மோசம்’, 300 முதல் 400 புள்ளிகள் வரை இருந்தால் ‘மிகவும் மோசம்’, 400 முதல் 500 புள்ளிகள் வரை இருந்தால் ‘தீவிரம்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com