'இஸ்ரேலைக் காயப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை': சஞ்சய் ரௌத்

இஸ்ரேல் தூதரகத்தின் கடிதத்துக்குப் பதிலளிக்கும்வகையில் சிவசேனை எம்.பி. விளக்கமளித்துள்ளார்.
சஞ்சய் ரௌத்
சஞ்சய் ரௌத்

சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத், இஸ்ரேல் குறித்து ஹிட்லரை மேற்கொள் காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தனது கருத்துக்கு தற்போது விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக சஞ்சய் ரௌத், காஸா மருத்துவமனையில் நடந்த தாக்குதல் விடியோவைப் பகிர்ந்து  ‘ஹிட்லர் ஏன் யூதர்களை வெறுத்தார் என இப்போது புரிந்து கொள்ள முடிவதாக’ அவர் பதிவிட்டிருந்தார்.

இதனை இஸ்ரேல் தூதரகம் கடுமையாக எதிர்த்து கடிதம் அனுப்பியிருந்தது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் நடந்துவரும் வேளையில், இவ்வாறுதான் தெரிவித்தது குறித்து இஸ்ரேல் தூதரகத்துக்கு வேறு யாரும் இதனை அனுப்பிtஹ் தன்னை எதிர்க்கத் தூண்டியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சஞ்சய் தெரிவித்தாவது, “இஸ்ரேல் குறித்த எனது பதிவு பழையது. ஹிட்லர் குறித்து அதில் குறிப்பிட்டது எந்தவிதத்திலும் இஸ்ரேலியர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அல்ல. நான் அந்தப் பதிவை நீக்கி விட்டேன். இஸ்ரேலில் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலையும் நான் விமர்சித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “அதனை மனிதநேய அடிப்படையில்தான் குறிப்பிட்டேன். நீங்கள் மனிதநேயம் காட்டவில்லை என்பதால் கூட அவர் (ஹிட்லர்) உங்களை எதிர்த்திருக்கலாம். இதைதான் நான் சொல்ல வந்தேன். ஒரு மாதத்திற்கு பிறகு இஸ்ரேல் தூதரகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதை செய்தது சஞ்சய் ரௌத்தான், அவரைக் கண்டியுங்கள் என யாரேனும் சொல்லியிருக்கலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com