காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: கெலாட் நம்பிக்கை

ராஜஸ்தானில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என மாநில முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜஸ்தானில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என மாநில முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தானில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று, டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் அசோக் கெலாட் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, 

பாஜக தலைவர்கள் தங்கள் பிரசாரத்தில் ஆத்திரமூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், ராஜஸ்தான் மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை, தக்க பதிலடி கொடுப்பார்கள். 

எங்கள் திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். 

காங்கிரஸுக்கு ஆதரவாக ஒரு அடிமட்டம் இருப்பதாகவும், மாநிலத்தில் ஆட்சிக்கு எதிரான காரணி எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com