
திருப்பதி - திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹைதரபாத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெலங்கானா மாநிலத்திற்கு வருகை புரிந்தார்.
ஹைதராபாத் அருகேவுள்ள கன்ஹா சாந்தி வனம் எனும் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, ஆந்திர மாநிலம் திருப்பதி சென்றார்.
ஆந்திரம் சென்ற பிரதமர் மோடியை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பலர் வரவேற்ற்றனர்.
திருப்பதி நகரில் சாலைமார்க்கமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு திருமலை கோயிலில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 140 கோடி இந்திய மக்களின் நலனுக்கான திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதியிடம் பிரார்த்தனை செய்ததாகப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி திருப்பதி - திருமலை கோயில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.