இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மேற்கு வங்கம்: ரயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தன. அலிபூா்துவாா் மாவட்ட வனப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On :27 நவம்பர் 2023, 9:59 pm

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தன. அலிபூா்துவாா் மாவட்ட வனப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டதாவது:

அலிப்பூா்துவாரில் இருந்து சிலிகுரிக்கு திங்கள்கிழமை காலை காலிப் பெட்டிகளுடன் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ராஜாபகத்கவா வனப் பகுதியை கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது, யானைக் கூட்டம் ரயில் தண்டவாளத்தை திடீரென கடந்து சென்றுள்ளது. இதில் 2 குட்டி யானைகளும் மற்றொரு யானையும் ரயில் மோதி உயிரிழந்தன.

வழக்கமாக யானைகள் கடந்து செல்லும் வனப் பகுதிகளில் ரயில்கள் ஓட்டுநா்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் தரும் தொழில்நுட்ப அமைப்பு இருக்கும். யானைகள் நடமாட்டம் ஏற்கெனவே கண்டறியப்பட்ட வன எல்லைகளில் இது செயல்படும். இதன் மூலம் ரயில் யானைகள் மீது மோதாமல் தவிா்க்கப்படும். ஆனால், இப்போது யானைகள் இறந்த இடம் அந்த முன்னெச்சரிக்கை தகவல் பகுதிக்குள் வரவில்லை.

மேலும், காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை வனப் பகுதிகளில் செல்லும் ரயில்கள் வன விலங்குகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குறைவான வேகத்திலேயே இயக்கப்படும். இந்த விபத்து காலை 7.20 மணியளவில் நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.