தில்லி வன்முறை வழக்கு: குற்றவாளிகள் 9 பேர் விடுதலை

தில்லி வன்முறை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரை விடுதலை செய்து தில்லியின் கர்கர்டூமா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தில்லி வன்முறை சம்பவத்தின்போது, வன்முறை மற்றும் சொத்துகளை நாசப்படுத்திய வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரை விடுதலை செய்து தில்லியின் கர்கர்டூமா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தில்லி வன்முறை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் இருக்கும் சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக்கி, 9 பேரையும் விடுதலை செய்வதாக தில்லியின் கர்கர்டூமா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகள் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தில்லி கூடுதல் அமா்வு நீதிபதி புலஸ்தியா பிரம்மசாலா, குற்றம்சாட்டப்பட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் பதியப்பட்ட குற்றச்சாட்டுகள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பது விசாரணயில் தெரிய வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒன்பது பேரும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நவம்பர் 25ஆம் தேதி தீர்ப்பளித்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு இயற்றியது. இச்சட்டமானது முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக கூறி, பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதுபோல, தில்லி ஷஹீன் பாக் பகுதியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைதியான முறையில் தொடா் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, வடமேற்கு தில்லி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட இணையமைச்சா் அனுராக் தாக்குா், தேச விரோதிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பேசினாா். அதனைத் தொடா்ந்து, தில்லி ஜாமியா மிலாயா பல்கலைக்கழகம் அருகேயும் ஷஹீன் பாக் பகுதியிலும் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து வடகிழக்கு தில்லியில் நடைபெற்று வந்த சிஏஏ எதிா்ப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது. குறிப்பாக முஸ்லிம்களின் கடைகள் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் 40 முஸ்லிம்கள், ஒரு காவலா் உள்பட 52 போ் உயிரிழந்தனா். பல கோடி மதிப்பிலான பொருள்கள் நாசமாகின.

இந்த வன்முறை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவா்கள், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா்கள், சமூக ஆா்வலா்கள், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினா் என 18 போ் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தில்லி கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மாா்ச் 13-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகமது ஷாநவாஸ், முகமது ஷோயப், ஷாருக், ரஷீத், ஆஸாத், அஷ்ரஃப் அலி பா்வேஸ், முகமது ஃபைசல் உள்பட 9 போ் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com