கேரளத்தில் 6 வயது சிறுமி கடத்தல்: தொடர் தேடுதலில் போலீஸார்!
கேரளத்தில் 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரளத்தில் 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூர் பகுதியைச் சேர்ந்த அபிஹல் சாரா ரிஷி(6). இவர் தனது சகோதரனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திங்கள்கிழமை மாலை அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்ற கும்பல் சிறுமி சாராவை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றது.
பின்னர், சிறுமியின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து உங்கள் மகளை கட்த்திவிட்டதாகவும், சிறுமியை விடுவிக்க ரூ.5 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். பின்னர் இரவு 10 மணிக்கு மீண்டும் அழைத்து ரூ.10 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை மீட்க மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிறுமி கடத்தப்பட்ட காரின் பதிவு போலியானது என்பதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறுமியை விரைந்து கண்டறிய காவல்துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...