47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேர்தல் முடிந்த 3-வது நாளில் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

ராஜஸ்தான் தலைமை தேர்தல் அதிகாரிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2023, 10:48 am

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மருத்துவமனையில் இன்று (செவ்வாய்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உடல்நிலை சீராக இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

1995-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சைச் சேர்ந்த குப்தா, ராஜஸ்தான் மாநிலத்தில்  தலைமை தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டார்.

மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவ.25  அன்று நடந்து முடிந்துள்ளது. டிச. 3 வாக்குப்பதிவு எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.