சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்: உத்தரகண்ட் முதல்வர்

குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்ததாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்: உத்தரகண்ட் முதல்வர்

குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்ததாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கத்துக்குள் 15 நாள்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், பொறியாளர்கள், பல்துறை நிபுணர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் தங்களது முழு பலத்துடன் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

துரிதமாக மீட்க, மலைப் பகுதியில் செங்குத்தாக துளையிடும் பணியோடு, சுரங்க இடிபாடுகள் பகுதியில் கிடைமட்டமாக துளையிடும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, சுரங்கத்தின் மறுமுனையான பா்கோட் வழியாகவும் கிடைமட்டமாக மூன்றாவது துளையிடும் பணியைத் தொடங்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

இந்த நிலையில், கிடைமட்டமாக தோண்டி குழாய்களை அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டதாகவும், சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், சுரங்க விபத்து ஏற்பட்ட இடத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, பிரதமர் அலுவலக முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன் மருத்துவக் குழுவினர் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com