பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதிய மோட்டார் வாகனத் திட்டம்: மாசுபாட்டைக் குறைக்க உதவுமா?

தில்லி அரசு. புதிய மோட்டார் வாகனத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :29 நவம்பர் 2023, 12:53 pm

DIN

புது தில்லி அரசு, ‘தில்லி மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் மற்றும் சேவைகள் வழங்குநர் திட்டம் 2023’ என்கிற திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக தில்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் அனைத்து பயணிகள் போக்குவரத்து, சேவை வழங்குதல் மற்றும் ஆன்லைன் விற்பனை ஆகியவற்றை அளிப்பவர்களின் வாகனங்களை 2030-ம் ஆண்டுக்குள் மின்சார வாகனமாக மாற்ற வலியுறுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே உள்ள மற்றும் புதிய ஒருங்கிணைப்பாளர்கள் இந்தத் திட்டத்தின் அறிவிப்பு வெளிவந்த 90 நாள்களுக்குள் உரிமம் பெற வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தத் திட்டம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் சூழலியல் பாதுகாப்பையும் முதன்மையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசுபாட்டைக் குறைக்க மின் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் நாட்டிலேயே கெஜ்ரிவால் அரசு மட்டுமே கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளுக்கான சேவைகள் வழங்கும் தளங்கள், விலையை உயர்த்தியுள்ளது குறித்து புகார் எதுவும் வரவில்லை என்றும், அப்படி புகார் அளிக்கப்பட்டால் விதிகள் வகுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.