தில்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வீட்டில் புதன்கிழமை காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தில்லியில் உள்ள சஞ்சய் சிங் வீட்டில் மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை தில்லி அரசு அமல்படுத்தியது. அதன்படி, தனியார் நிறுவனங்களுக்கு மதுபான கடை உரிமம் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை விசாரித்த அமலாக்கத்துறை தில்லி துணை முதல்வரும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது.
இதையும் படிக்க: உஜ்வாலா எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அதிகரிப்பு
இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி
வீடியோக்கள்

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை


