

மகாராஷ்டிர மாநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலியானார்.
மகாராஷ்டிர மாநிலம், பிதர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் மகாதேவ் சக்ரே. 16 வயதான அந்த இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள லத்தூர் வந்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் லட்சுமி காலனியில் உள்ள 3மாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியில் இருந்து சக்ரே தவறி விழுந்தார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சக்ரே சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்து மரணம் என சிவாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.